தமிழக செய்திகள்

குரோம்பேட்டையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்

குரோம்பேட்டையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி வழங்கினார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் மண்டல அலுவலக சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. சிக்னலை நேற்று தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி திறந்து வைத்து, சாலைவிதிகளை மதிப்பது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் போலீஸ் கமிஷனர் ரவி கூறியதாவது:-

வாகன ஓட்டிகள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தெளிவாக தெரியும் வகையில் குரோம்பேட்டையில் எல்.இ.டி. சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இது சோதனை முயற்சி. தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் எல்லை முழுவதும் இதே முறையில் எல்.இ.டி. சிக்னல் அமைக்கப்படும். மக்கள் சாலைவிதிகளை மதித்தால் நிச்சயமாக மற்ற சட்டங்களையும் கடைபிடிப்பார்கள்.

இதனால் சமுதாயத்தில் அனைத்து குற்றங்களும் குறையும். சாலை ஒழுங்கை எப்போது சரிசெய்கிறோமோ , அப்போது தான் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து