தமிழக செய்திகள்

கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு

கேரளாவுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் துயரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்கவும், உதவி செய்யவும் முடிவெடுத்துள்ளோம்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பொதுமக்களில் ஒரு பகுதி என்ற நிலையில் நிவாரண நிதியாக எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதியாக வழங்க உரிய ஆணை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த சங்கம் என்ற முறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது. இதற்கு முன் உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வினை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பினை செலுத்தியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்