தமிழக செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 40 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்தனர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 40 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தையே எட்டுகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக இருந்து பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்த ஒரு சில நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை காவல்துறையைச் சேர்ந்த 40 காவலர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இந்த நிகழ்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சென்னை காவல் ஆணையர், கொரோனாவில் இருந்து குணமடைந்த இன்னும் பல காவலர்களும் பிளாஸ்மா தானம் அளிக்க தயாராக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நோயாளிகளை மீட்கும் வகையில் இந்த பிளாஸ்மா தானம் அளித்துள்ளதாகவும் கூறினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்