தமிழக செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு முதலில் தடுப்பூசி போட்டு தமிழகம் சாதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணிகளுக்கு முதலில் தடுப்பூசி போட்டு தமிழகம் சாதனை படைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த 2-ந்தேதி இரவு 10 மணிக்குத்தான் மத்திய அரசு அறிவித்தது. அன்றைய தினம் நானும், உதயநிதி ஸ்டாலினும் கடலூருக்கு சென்று கொண்டிருந்தோம்.

மறுநாள் காலை 9 மணிக்கு திட்டக்குடி தொகுதியில் உள்ள பெண்ணாடம் என்ற ஊரில், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். அதாவது, அறிவித்த 10 மணி நேரத்தில் தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு முதன்முதலில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது தமிழகத்தில்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு