தமிழக செய்திகள்

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கர்நாடக மாநில கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டிலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை ஓட்டியுள்ள கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இருந்தது. இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) ஓரிரு இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவிலோ நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசையும் ஓட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை பொறுத்தவரையில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 8 சென்டி மீட்டரும், வால்பாறையில் 7, சின்னக்கல்லார் 6, இரணியல், குளித்துறை, தக்கலை, குளச்சல் தலா 4, பாபநாசம், மயிலாடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், பெரியாறு தலா 3, செங்கோட்டை, தென்காசி, பேச்சிப்பாறை, பூதப்பாண்டி தலா 2, பொள்ளாச்சி, இளையாங்குடி, பொன்னேரி, ஆர்.எஸ்.மங்கலம், சேரன்மகாதேவி, திருவாடானை தலா 1 சென்டி மீட்டர் அளவு மழை பெய்தது. இவ்வாறு அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்