தமிழக செய்திகள்

ஜூன் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்...?

கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜூன் 2-வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் கூட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு ஜூன் 2-வது வாரம் கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்