தமிழக செய்திகள்

தமிழக சட்டசபையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

சட்டசபையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடக்கிறது.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 18-ந் தேதி பொது பட்ஜெட்டும், 19-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மார்ச் 21-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. ஏப்ரல் 6-ந் தேதி முதல் துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

அந்தவகையில் சட்டசபையில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த 2 துறைகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் இருக்கின்றன. சட்டசபை இன்று காலை கூடியதும் முதல் நிகழ்வாக கேள்விநேரம் எடுத்துக்கொள்ளப்படும்.

அதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் கவனஈர்ப்பு தீர்மானங்கள், முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதைத் தொடர்ந்து காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேச இருக்கிறார். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர்களும் பேச இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார்

இன்றைய கூட்டத்தை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காவல், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். மேலும் காவல், தீயணைப்புத்துறை சம்பந்தமான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, ஏனைய அலுவல்கள், மசோதா நிறைவேற்றம் போன்ற நிகழ்வுகளும் நடக்க இருக்கின்றன. இந்த கூட்டத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற இருக்கிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்