சென்னை,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்க உள்ளார்.
இன்று பிற்பகல் 1 மணி அளவில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எல்.முருகன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
முன்னதாக கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..