தமிழக செய்திகள்

தமிழக பட்ஜெட் : அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #TNBudget

தினத்தந்தி

சென்னை

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு

* 37 அணைகளில் கட்டமைப்பை புனரமைக்கும் பணிகளை 2-வது கட்டமாக மேம்படுத்தப்படும்

* அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது

* அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு

* திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 132.8 கோடி செலவில் செயல்படுத்த முடிவு

* 2019- 20 பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது