சென்னை,
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- மோசமான நிதி நிலைமையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய பட்ஜெட். மீனவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார்.