சென்னை,
ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தை தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் திடீரென்று ஓடாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் பேராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடித்தது. போராட்டம் காரணமாக மாணவ,மாணவியர், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 865-பேருந்துகளில் இன்று காலைநிலவரப்படி 50 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் 30 பேருந்துகள், சத்திய மங்கலத்தில் 15-பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடலூரில் 350 அரசு பேருந்துகளில் 44 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரப்பகுதியில் 50 சதவீத அளவிற்கே பேருந்துகளே இயக்கப்படுகின்றன. #TransportStrike #BusStrike