தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 2 ஆம் தேதி ஆளுநர் உரையோடு தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது, 4 நாட்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி(நாளை மறுநாள்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் துறை ரீதியான புதிய திட்டங்கள், ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை, தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்