தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது சட்டசபை கூட்டத்தில் புதிய அறிவிப்பு வெளியிடுவது குறித்து ஆலோசனை

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. சட்டசபை கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. இதில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மேலும், புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்து எந்தெந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவது?, எவ்வளவு நிதி ஒதுக்குவது? என்பது குறித்தும், புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்