தமிழக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், ஒரு அற்புதமான ஆண்டிற்கான, இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளுக்கான எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம் தேசத்திற்கு சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் இறைவன் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில், எங்கள் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ.நரேந்திர மோடிஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாரும் எட்டமுடியாத உயரத்துக்கு நம் தேசத்தை அழைத்துச் செல்வதற்கான அவரது இலக்கில், அவருக்கு நல்ல ஆரோக்கியமும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு