கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று டெல்லி பயணம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி புறப்பட உள்ளனர். அவர்களுடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களும் டெல்லி செல்ல உள்ளனர்.

டெல்லி செல்லும் காங்கிரஸ் எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி