தமிழக செய்திகள்

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

 கரூர் சுங்ககேட்டில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவர் மனோகரன், மாநில பொது செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாநிலத்தலைவர் மனோகரன் நிருபர்களிடம் கூறுகையில், வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை வீட்டு பயன்பாட்டிற்கான கட்டணமாக மாற்றி அமைத்து தர வேண்டும், ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடைகளில் கட்டுப்பாடு இன்றி மருத்துவரின் பரிந்துரை சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். தற்போது உரிய பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வது இல்லை, என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து