தங்கச்சிமடம்,
இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் டிட்டோ (வயது 22) என்பவர் உயிரிழந்துள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனை அடுத்து மீன்பிடிக்க சென்றிருந்த தமிழக மீனவர்கள் ஆபத்தான நிலையில் கரைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். உயிரிழந்த மீனவர் உடலுடன் ராமேஸ்வரம் நோக்கி அவர்கள் வந்து கொண்டுள்ளனர்.