தமிழக செய்திகள்

புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது - அமைச்சர் காமராஜ்

புதிய கல்விக்கொள்கையை குறித்து தமிழக அரசு உடனடியாக ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூரில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய கல்விக் கொள்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், 32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு எல்லா காலத்திலும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு இருமொழிக் கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி பெற்று வருகிறது.

புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு உடனடியாக ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது. புதிய கல்வி கொள்கையை ஆய்வு செய்த பின்னரே முடிவு அறிவிக்கப்படும். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து கல்வித்துறை அமைச்சர் முடிவுகளை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...