தமிழக செய்திகள்

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது- முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் கொண்டு வரப்படுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுடன் ஆலோசித்து தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தீவிரப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது. தொழில் பணிகள் தொய்வில்லாமல் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தமிழகம் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. கொரோனா காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் முகாம் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா காலத்தில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்