தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேவியர்பால்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் முத்துராமசாமி கலந்து கொண்டு பேசினார். தீர்மானங்களை விளக்கி மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசினார். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பணி மாறுதல் என்ற போர்வையில் பந்தாடுவதை நிறுத்தி, வருகிற மே மாதம் உபரியாக உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கலந்தாய்வு நடத்தி அவர்களது பணியை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிவக்குமார், கலியபெருமாள், அமல்சேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.