தமிழக செய்திகள்

சனிக்கிழமையும் மீன், இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

சனிக்கிழமையும் மீன், இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமையும் மீன், இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறுவோர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கத்தின்போது இறைச்சி கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சனிக்கிழமையும் கடைகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT