தமிழக செய்திகள்

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

ஊரடங்கு தளர்வுகளை சரியாக புரிந்துகொள்ளாமல் அனைத்து இடங்களிலும் மக்கள் முக கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வலம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது மிகவும் அபாயகரமான விஷயம். அடுத்த மாதம் கொரோனா 3-வது அலை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. மேலும் 3-வது அலை செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய அளவில் உச்சம் பெறும் என கூறப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் தற்போதிலிருந்தே விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

3-வது அலை மக்களை தாக்காமல் இருக்க அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே 3-வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். 3-வது அலையில் இருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வீட்டுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்