சென்னை,
ஜூலை மாதம் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் பாமாயில் இலவசமாக வழங்கப்படும். வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும். 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சென்று இலவசப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.