தமிழக செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றிரவு டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றிரவு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். #PanwarilalPurohit

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு 6 வார காலஅவகாசம் வழங்கியது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சட்டமன்ற எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 5ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முடிவானது.

இதனிடையே தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருடன் ஆளுநர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

அவர் இன்று இரவு 7.10 மணி விமானத்தில் டெல்லிக்கு செல்கிறார். அங்கு தமிழகத்தில் நிலவும் சூழல் பற்றி மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு