தமிழக செய்திகள்

நாளை டெல்லி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை புதன்கிழமை (20.04.2022) டெல்லி செல்ல உள்ளார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கோரிக்கை வலுத்துள்ள நிலையில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை