தமிழக செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- உடல் கவசம், முகக் கவசங்கள் தேவையான அளவு உள்ளது; தட்டுப்பாடு இல்லை.

1.50 லட்சம் நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.1 சதவிகிதம் ஆகும். சாதாரண சளி காய்ச்சல் இருந்தாலே கொரோனா பரிசோதனை செய்வதை உறுதி செய்துள்ளோம். கொரோனாவில் இருந்து மருத்துவர்களை பாதுக்காக முக்கியத்துவம் அளிக்கிறோம் என்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்