தமிழக செய்திகள்

“தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 3வது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுற்றுச்சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி தான் என்று குறிப்பிட்டார். தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது என்றும் அதற்கான கருவியாக மக்கள் நீதி மய்யம் கட்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காக்கும் தெய்வங்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இலவசங்களுக்காக கையேந்தி நிற்க வேண்டியது இல்லை என்றும், தேவைகளைப் பெற நமக்கு உரிமை இருக்கின்றது எனவும் அதைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை