தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின்போது பல்வேறு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. மதுவிலக்கு திருத்த சட்டம் உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவு பெற்றது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு