தமிழக செய்திகள்

ஜனவரி 5 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது ; தமிழக அரசு

ஒமைக்ரன் பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

2022-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

முன்னதாக, 2022-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று சற்று கடுமையாக்கப்பட்டது. இதையடுத்து, கலைவாணர் அரங்கிலேயே தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?