தமிழக செய்திகள்

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது எஸ்.பி.பி. உடல்

அஞ்சலி செலுத்த பொதுமக்கள் திரண்டு வருவதால் தாமரைப்பாக்கம் வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை,

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் , இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், தனியார் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு 4 மணியளவில் கொண்டு வரப்பட்டது. எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் , அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது.

அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க எஸ்.பி.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் நாளை நல்லடகம் செய்யப்பட உள்ளது.

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்தனர். கொரோனா தொற்று காலம் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் வைக்கப்பட்டுள்ள பண்ணை வீட்டில் 4 டிஎஸ்.பிக்கள் தலைமையில் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...