சென்னை,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 58 படிப்புகளை தொலைதூரக்கல்வி மூலம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
இதற்காக சென்னை, திருச்சி, கோவை, தர்மபுரி, விழுப்புரம், மதுரை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டல மையங்கள் அல்லது 132 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.