தமிழக செய்திகள்

தமிழக ரெயில்வே திட்டங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

தமிழக ரெயில்வே திட்டங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. நேரில் வலியுறுத்தல்.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கை மனுக்களின் தொகுப்பை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமசிடம் நேற்று வழங்கி, தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ், தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது, டி.ஐ.சைக்கிள் நிறுவனம் அருகேயுள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்துதல், அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்வது, இந்தாண்டில் தொடங்கப்பட்ட ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி புதிய ரெயில்பாதை பணிகளை விரைந்து முடித்தல், மீனம்பாக்கம் (திரிசூலத்தில்) மற்றும் குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதைகள் அமைத்தல், தாம்பரம் ரெயில் நிலையத்தில் 5, 6, 7, 8-வது நடைமேடைகளில் எஸ்கலேட்டர் வசதி அமைத்தல், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இதயநோய், சர்க்கரை நோய்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கோரிக்கைளை விரைவில் நிறைவேற்றிட டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாகப் பரிசீலித்து அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் செல்வப் பெருந்தகை, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, ஜோசப் சாமுவேல் ஆகியோரும், பல்லவபுரம் நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து