தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி அமைக்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சி

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி அமைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொள்கிறது.

தினத்தந்தி

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா 1-ந் தேதியை காநாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவாகளுக்கான தனிக்கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றன.

ஆனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி உருவாக்கப்படவில்லை. 1970-களில் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்தவர் கருணாநிதி. அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை.

இந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை கடக்கும் நிலையில், கருணாநிதியின் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்ற கனவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை