தமிழக செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்த்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடி பட்டி கிராமத்தில் விஜய குலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது சோலை பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கருப்பசாமி மற்றும் அவரது உறவினர் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த அறை இடிந்து தரைமட்டமானது. அப்போது பணியில் இருந்த 7 பேர் காயம் அடைந்தனர்.

வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை உடனடியாக அங்கிருந்த வாகனங்களில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 5 பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார்(வயது38) மற்றும் ஆலை உரிமையாளர் கருப்பசாமிவயது45)ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசி (வயது 48) என்பவரும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை