தமிழக செய்திகள்

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமராஜரின் 121-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக வந்து டாஸ்மாக் கடையை 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

மேலும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்