சென்னை,
தமிழகத்தில், கடந்த பிப்ரவரியில் தொழில்நுட்ப வாரியத்தின் மூலம் நடந்த, தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வில் ஒன்றரை லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.
இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஊரடங்கு அமலாகும் முன்பே, மார்ச் மாதத்தில் திருத்தி முடிக்கப்பட்டன. தேர்வு முடிந்து நான்கு மாதங்களை கடந்தும், அதன் முடிவுகள் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது http://tndte.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.