தமிழக செய்திகள்

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு தகவல்

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த ஜனவரி 4, 5, 11 மற்றும்12 ஆகிய நான்கு நாட்களில் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய இதுவரை 17,01,662 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், இதில் புதிதாக பெயர் சேர்க்க 13,16,921 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 439 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் நாளை முதல் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து