தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதியின் பேச்சு நம்பிக்கையளிக்கிறது.

தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஐகோர்ட்டில் அதிகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியே கூறியிருக்கிறார். அதனால், தமிழை சென்னை ஐகோர்ட்டு மொழியாக்குவதற்கு எந்த தடையுமில்லை.

எனவே, சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பி அவரின் பரிந்துரையை பெற்று ஜனாதிபதி மூலம் அறிவிக்கை வெளியிடச் செய்யுமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பேரவையில் புதிய தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து