தமிழக செய்திகள்

தென்சென்னை தொகுதியில் போட்டியிட தமிழச்சி தங்கபாண்டியன் விருப்ப மனு தாக்கல்

நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆ.ராசா எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க.வினர் விண்ணப்பப்படிவத்தை முறையாக பூர்த்தி செய்து கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி (அதாவது இன்று) வரை தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்தார். இதைபோல நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆ.ராசா எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார். வட சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கலாநிதி வீராசாமி விருப்ப மனு தாக்கல் செய்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்