தமிழக செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

மக்கள் பணி தொடர திரவுபதி முர்முவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், ஜனாதிபதியை வாழ்த்தி தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

நம் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் தனது பணிகளை தொடங்கியிருக்கும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடுசவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார்; நம் முதல் குடிமகளாக திகழும் மரியாதைக்குரிய திரௌபதி முர்முவின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை