தமிழக செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து..!

மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 59-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அமித்ஷாவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "வளமான,வலிமையான பாரதத்தை உருவாக்க உறுதி கொண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தோளோடு தோள் நின்று உலக நாடுகள் பாராட்டும் வகையில் ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்தியது, சந்திரயான், ஆதித்யா போன்ற விண்கலத்தில் வெற்றி கண்டது, தீராத காஷ்மீர் எல்லை பிரச்சினை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற எங்களின் வழிகாட்டி பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம் மரியாதைக்குரிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்