தமிழக செய்திகள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தினத்தந்தி

சென்னை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் ஞானதேசிகன்( 71). தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வந்தார்.நெஞ்சுவலி காரணமாக நவம்பர் மாதம் 11-ந்தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் இன்று காலைமானார்.

ஞானதேசிகன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2011 முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த ஞானதேசிகன், மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்