சென்னை
சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-
சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
தென் தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், வட கடலோர மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கபட்டு உள்ளது
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவா, ஹிமாச்சல், உத்தராகண்ட், குஜராத், மத்திய பிரேதசம், மேற்கு வங்க மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.