தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 9 ந்தேதி ஞாயிற்றுகிழமை கூடுகிறது. இந்த கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே அந்த மனுவின் மீதான விசாரணையை முடித்து வைப்பதாகவும் கூறினார்கள்.

அத்துடன், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து, அதை மாநில கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 9 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை மற்றும் குட்கா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு