தமிழக செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் 3 பேர் காயம்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று அதிகாலை கோடியக்கரை கடற்கரையில் இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரைக்கு தென்கிழக்கில் ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள். தமிழக மீனவர்களை கம்பிகளை கொண்டு தாக்கினர். இதில் 3 பேரும் காயம் அடைந்தனர்.

மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகள், மொபைல் போன்கள், ஜிபிஎஸ் உபகரணங்களையும் பறித்துச் சென்றுள்ளளனர்.

காயமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மருத்துவமனைக்கு சென்று மீனவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு இடையே, ஆற்காட்டுத்துறையில் மீனவர்கள் இந்த தாக்குதலை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.