சென்னை,
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். ஆளுனரின் இந்த ஆலோசைனைக் கூட்டத்தில் 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை வேந்தர்கள் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், அவர் கூறுகையில், தமிழகத்துக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் அளவுக்கு துணைவேந்தர்கள் பணியாற்ற வேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றார்.இதற்கு முன்னதாக உயர்கல்வி துறை அமைச்சர் கே பி அன்பழகன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.