தமிழக செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினாகள் பெயாகள் பரிந்துரைப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர் பெயரும் ஒழுங்காற்றுக் குழுவுக்கு நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #CauveryIssue

தினத்தந்தி

சென்னை,

காவிரி நதிநீ பங்கீடு தொடாபான வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்க திட்டமிட்ட நிலையில் தற்போது பெயாகளை பரிந்துரைத்துள்ளது.

அதன்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணி முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நேற்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சக அனுமதியை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 18-ஆம் தேதி அன்று தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கும் முன்னரே காவிரி வரைவு செயல் திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்த, மத்திய அமைச்சரவையை கூட்டி அதன் ஒப்புதலை பெற்று, அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்