தமிழக செய்திகள்

புத்தாண்டு தினத்தில் கோவில்களில் நள்ளிரவு 12 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்!

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி வரை கோவில்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்பார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு இன்று காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 551 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் இருந்து வரும் வருமானம் அந்தந்த கோவில்களுக்கே வழங்கப்படும். அந்த வருமானம் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும், கோவில் திருப்பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும். இதுவே தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.

நாளை மறுநாள் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாண்டு அன்று தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உள்ள அனைத்து கோவில்களும் இரவு 12 மணி வரை திறந்திருக்கும். எனவே, பக்தர்கள் அனைவரும் நிதானமாக, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்