தமிழக செய்திகள்

இடைக்கால நிவாரணம் அறிவித்ததற்கு எதிர்ப்பு மின்வாரிய ஊழியர்கள் 16–ந் தேதி வேலை நிறுத்தம்

மின்வாரிய ஊழியர்கள் 16–ந் தேதி வேலை நிறுத்தம் என தொழிற்சங்கங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ந் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது. இதுதொடர்பான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மின்வாரிய தொழிற்சங்கத்தினர் 16ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டப்படி வரும் 12ந் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் காணாத பட்சத்தில் வரும் 16ந் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்தம் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாறவும் வாய்ப்பு உள்ளது என மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பிப். 12-ல் நடக்கவிருந்த நிலையில் இடைக்கால நிவாரணம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...