தமிழக செய்திகள்

தஞ்சை பெரியகோவில் மின்னொளியில் ஜொலித்தது

தஞ்சை பெரியகோவில் மின்னொளியில் ஜொலித்தது

இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென்ஆப்பிரிக்கா, துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் முக்கியமான கூட்டமைப்புகளில் ஒன்று ஜி-20 அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஏற்கும். இந்த வரிசையில் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியா வசம் வந்தது. இந்தியா நேற்றுமுன்தினம் இந்த தலைமை பொறுப்பை ஏற்றது. ஓராண்டு காலத்துக்கு தலைமை ஏற்றுள்ளது. இதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 என்ற அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஒளிர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை பெரியகோவில் நுழைவு வாயிலில் உள்ள மராட்டா வாயில் சுவரில் நேற்றுஇரவு ஜி-20 என மின்னொளியில் ஒளிர செய்யப்பட்டது. மேலும் அகழியையொட்டி உள்ள கோட்டைச் சுவரும், உள்புறமுள்ள கோட்டை சுவரும் மின்னொளியில் ஜொலித்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்